ஐ.பி.எல்.: தோனி 1-10 ஓவர்களுக்குள் பேட்டிங் வந்தால்... - சாஹல் பேட்டி

4 hours ago 2

முல்லான்பூர்,

18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முல்லான்பூரில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் பெற்ற நிலையில் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அதேவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற 5 முறை சாம்பியனான சென்னை அணி முயற்சிக்கும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய வீரருமான மகேந்திரசிங் தோனிக்கு எதிராக திட்டங்கள் வைத்திருப்பதாக பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர் கூறுகையில், "மஹி பாய் பல வருடங்களாக நான் பந்து வீசுவதை ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து பார்த்து இருக்கிறார். எனவே நான் எப்படி பந்து வீசுவேன், என்ன நினைக்கிறேன், என்ன செய்ய வாய்ப்புள்ளது என்பதை அவர் அறிவார். மஹி பாய் என்ன நினைக்கிறார் என்பதை என்னால் 2 - 3 சதவீதம் யூகிக்க முடியும். ஒருவேளை அவர் 1 - 10 ஓவர்களுக்குள் பேட்டிங் செய்ய வந்தால், அவருக்கு எதிராக பந்துவீச்சில் தாக்குதலை தொடுக்க வேண்டும்.

ஆனால் அவர் போட்டியின் பிற்பகுதியில் வந்தால், அவர் என்ன செய்ய முயற்சிப்பார் என்பதை நாங்கள் சரியாக புரிந்துகொண்டுள்ளோம். அதற்கேற்ப நாங்கள் திட்டமிடுகிறோம். அந்த சமயத்தில் நீங்கள் அவருக்கு ளிதான பந்துகளை மட்டும் வீசக்கூடாது. ஏனெனில் கடைசி நேரத்தில் அவர் எளிதான பந்துகள் கிடைத்தால் வெளியே அடித்து விடுவார்" என்று கூறினார்.

Read Entire Article