ஐ.பி.எல். தொடர்: சென்னை - பெங்களூரு போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்

1 day ago 1

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 28-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சந்திக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரசிகர்கள் www.chennaisuperkings.com என்ற இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடைபெற்ற சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை, தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article