
லாகூர்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
அதே சமயம் 6 அணிகள் இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) டி20 தொடர் இன்று தொடங்கி மே 18-ந்தேதி வரை பாகிஸ்தானில் 4 நகரங்களில் நடக்கிறது. ஐ.பி.எல். நடக்கும் சமயத்தில் பி.எஸ்.எல். லீக் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக இந்த ஐ.பி.எல். சீசனுக்கான மும்பை அணியில் இடம்பெற்றிருந்த லிசார்ட் வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வீரர் கார்பின் போஷ் மும்பை அணியில் சேர்க்கப்பட்டார் .
ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் சல்மி அணிக்காக விளையாடதேர்ந்தெடுக்கப்பட்ட கார்பின் போஷ் அதிலிருந்து விலகினார்.
இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு கார்பின் போஷுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் கார்பின் போஷ் பி.எஸ்.எல். தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு காலம் தடை விதித்து தண்டனை வழங்கியுள்ளது.