
அகமதாபாத்,
18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.
இதில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட பஞ்சாப் கிங்ஸ் - வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:
மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், ராஜ் பாவா, டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ரீஸ் டாப்லி
பஞ்சாப் கிங்ஸ்: பிரியன்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷசாங்க் சிங், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்