
விசாகப்பட்டினம்,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 9 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
ஐதராபாத் அணி இதுவரை 2 லீக் ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 1 தோல்வி கண்டுள்ளது. அதேவேளையில் டெல்லி அணி ஒரு ஆட்டத்தில் ஆடி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் 2வது வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.