
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து கொல்கத்தாவின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் மற்றும் குர்பாஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் குர்பாஸ் 26 ரன்னிலும், சுனில் நரைன் 27 ரன்னிலும், அடுத்து வந்த ரஹானே 26 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து ரகுவன்ஷி மற்றும் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ரகுவன்ஷி 44 ரன்னிலும், ரிங்கு சிங் 36 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து ரசல் மற்றும் பவல் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி ஆட உள்ளது.