ஐ.பி.எல்.: டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு

13 hours ago 2

அகமதாபாத்,

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 50 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

9 ஆட்டங்களில் ஆடியுள்ள குஜராத் அணி 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில், கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 9 ஆட்டங்களில் 3 வெற்றி, 6 தோல்வியை சந்தித்துள்ளது. எஞ்சிய 5 ஆட்டத்திலும் வென்றால் தான் பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 4-ல் குஜராத்தும், ஒன்றில் ஐதராபாத்தும் வெற்றி கண்டுள்ளன. இந்நிலையில், இன்றைய ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Read Entire Article