ஐ.பி.எல்.: ஜடேஜா - தோனி கூட்டணி மாபெரும் சாதனை

4 days ago 3

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர் 167 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிவம் துபே 43 ரன்களுடனும் (37 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), தோனி 26 ரன்களுடனும் (11 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஆட்டத்தில் லக்னோ வீரர் ஆயுஷ் பதோனி, ஜடேஜா பந்துவீச்சில் தோனியால் ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றப்பட்டார். ஐ.பி.எல். வரலாற்றில் ஜடேஜா பந்துவீச்சில் தோனி ஸ்டம்பிங் செய்து ஒரு வீரரை ஆட்டமிழக்க வைப்பது இது 9-வது முறையாகும்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை ஸ்டம்பிக் செய்த பந்துவீச்சாளர் - விக்கெட் கீப்பர் கூட்டணி என்ற சாதனை பட்டியலில் முதலிடத்திற்கு ஜடேஜா - தோனி கூட்டணி முன்னேறியுள்ளது.

இந்த வரிசையில் ஏற்கனவே அமித் மிஸ்ரா - தினேஷ் கார்த்திக் கூட்டணி மற்றும் பிரக்யான் ஓஜா - ஆடம் கில்கிறிஸ்ட் கூட்டணி தலா 9 முறைகளுடன் முதலிடத்தில் உள்ளன.

ரவிச்சந்திரன் அஸ்வின் - தோனி கூட்டணி 8 முறையுடன் 2-வது இடத்தில் உள்ளது. 

Read Entire Article