ஐ.பி.எல். ஏலத்தை இரு நாட்களாக நடத்தி முடித்த மல்லிகா சாகரின் செயலுக்கு வந்துள்ள பாராட்டுகளும், விமர்சனங்களும்....!

2 months ago 11
ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தை இரு நாட்களாக நடத்திய மல்லிகா சாகருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் விமர்சனங்களும் எழுந்துள்ளன. 48 வயதான அவர், ஜெட்டா நகரில் இரு நாட்கள் நடைபெற்ற ஏலத்தை நடத்தியதன் மூலம் ஐ.பி.எல்.ஏல வரலாற்றில் முதல் பெண் ஏலதாரர் என்ற பெயரை பெற்று உள்ளார். கடந்த இரு நாட்களாக சர்வதேச ஏல விதிமுறைகளில் இருந்து துளியும் மாறாமல் மல்லிகா ஏலத்தை நடத்தியதாக பலரும் பாராட்டி உள்ளனர். இதே நேரத்தில் ஜோஸ் பட்லரை ஏலம் விட்ட போது, 15 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு குஜராத் அணி ஏலம் எடுத்த நிலையில், அதனை 15 கோடியே 75 லட்சமென தவறுலாக மல்லிகா அறிவித்ததும், மல்லிகா சாகாரால் அபினவ் மனோகருக்காக மறு ஏலம் நடத்தும் நிலை வந்ததும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளன. 
Read Entire Article