ஐ.பி.எல்.: 2வது வெற்றியை பதிவு செய்வது யார்..? - லக்னோ-பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

1 day ago 2

லக்னோ,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 13வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.

ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் தோல்வி கண்டது. அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதேவேளையில், ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் தனது முதலாவது ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தியது.

இந்த சீசனில் தங்களது சொந்த மைதானத்தில் முதல்முறையாக விளையாடும் லக்னோ அணி வெற்றியுடன் தொடங்க முயற்சிக்கும். இன்றைய ஆட்டத்தில் 2வது வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்றில் லக்னோவும், ஒன்றில் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன. 

Read Entire Article