ஐ.பி.எல்.2025: முதல் அணியாக வெளியேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்..?

5 hours ago 2

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 70 ரன்களும், படிக்கல் 50 ரன்களும் வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் 206 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 194 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 49 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஹேசில்வுட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நடப்பு தொடரில் 9-வது லீக் ஆட்டத்தில் ஆடிய ராஜஸ்தான் அணிக்கு இது 7-வது தோல்வியாகும். வெறும் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

இனி வரும் அனைத்து போட்டிகளில் (5 போட்டிகள்) வெற்றி பெற்றாலும் அந்த அணி 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். அதுவும் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டும். அவ்வாறு நடந்தாலும் மற்ற அணிகளின் முடிவுகள் முடிவு ராஜஸ்தானுக்கு சாதகமாக அமைய வேண்டும். இதனால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. 

Read Entire Article