ஐ.பி.எல்.2025: முக்கிய தருணத்தில் இளம் வீரர் விலகல்.. மும்பை அணிக்கு பின்னடைவு

3 hours ago 3

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 5 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்று தடுமாற்றமாக தொடங்கியது.

அதன்பின் எழுச்சி பெற்ற மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பதிவு செய்து 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 4 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றாலே எந்த வித சிக்கலுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும்.

இந்நிலையில் இந்த முக்கியமான தருணத்தில் மும்பை அணியிலிருந்து இளம் சுழற்பந்து வீச்சாளரான விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

Get well soon, Vignesh Your #OneFamily wishes you a speedy recovery & we can't wait to see you back on the field soon #MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/Yej0ylKT6z

— Mumbai Indians (@mipaltan) May 1, 2025

இவருக்கு பதிலாக ரகு சர்மா என்ற பஞ்சாப் வீரர் மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இத்தகைய சூழலில் மும்பை இந்தியன்ஸ் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. 

Read Entire Article