
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒருவாரம் நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று பிற்பகலில் அறிவித்தது.
இந்நிலையில், மீதமுள்ள ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த பி.சி.சி.ஐ தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. போட்டிகளை உள்நாட்டில் நடத்தலாமா? அல்லது வெளிநாட்டிற்கு எங்காவது மாற்றலாமா? என ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி மீதமுள்ள லீக் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்களை இந்தியாவின் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் நடத்த பி.சி.சி.ஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வார காலத்திற்குள் எல்லையில் நிலைமை சீரானால் பழைய அட்டவணைப்படி போட்டிகள் நடக்கும் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும்.