
ஜெய்ப்பூர்,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
முன்னதாக கடந்த சில சீசன்களாக மகளிரை கவுரவிக்கும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறிப்பிட்ட ஒரு ஆட்டத்தில் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாடும். அந்த வகையில் இந்த சீசனிலும் மே 1-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது.
இந்த ஆட்டத்துக்கான ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி சர்வதேச மகளிர் தினமான நேற்று நடந்தது. இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனர் சங்கக்கரா அறிமுகம் செய்தார்.