ஐ.பி.எல். 2025: சி.எஸ்.கே. அணி இந்த 5 வீரர்களைதான் தக்கவைக்கும் - ஹர்பஜன் சிங் கணிப்பு

2 months ago 11

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரச்சின் ரவீந்திரா, வேகப் பந்துவீச்சாளர் மதிஷா பதிரானா ஆகிய 5 வீரர்களையும் தக்கவைக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கூறியதாவது,

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் விளையாடும் பட்சத்தில், அவரை முதல் வீரராக சி.எஸ்.கே தக்கவைக்கும். அவருக்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரச்சின் ரவீந்திரா தக்கவைக்கப்படுவார்கள். கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தக்கவைக்கப்படுவார்.

பதிரானா மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவரும் சி.எஸ்.கே நிர்வாகத்தால் அணியில் தக்கவைக்கப்படுவார். அதனால் எனது பார்வையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பதிரானா ஆகிய ஐந்து பேரும் தக்கவைக்கப்படுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article