
துபாய்,
ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 26-ந் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றன. இதில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
இதன் முடிவில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
தலா 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீசை (+0.626) பின்னுக்கு தள்ளி வங்காளதேசம் (+0.639) உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் முழு விவரம்:-
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம்.