
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் விராங்கனைகளின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது.
அதில் சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய தொடக்க ஆட்டக்காரர சுப்மன் கில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் மற்றும் நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் பிப்ரவரி மாத சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பட்டியலில் அலனா கிங் (ஆஸ்திரேலியா), திபாட்சா புத்தவோங் (தாய்லாந்து) மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் பிப்ரவரி சிறந்த வீராங்கனையாக அலனா கிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
