![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37901886-jnomi.webp)
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின் நோமன் அலி மற்றும் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 3 வீரர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37901812-cvj.webp)
அதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் கரிஷ்மா ராம்ஹாரக் (வெஸ்ட் இண்டீஸ்), பெத் மூனி (ஆஸ்திரேலியா) மற்றும் கோங்கடி திரிஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37901719-jw.webp)