
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அதன்படி இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களது முதல் போட்டியில் விளையாடி விட்டன. இதன் முடிவில் 'ஏ' பிரிவில் நியூசிலாந்து மற்றும் இந்தியா தலா ஒரு வெற்றி பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் உள்ளன. தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்த வங்காளதேசம், பாகிஸ்தான் முறையே கடைசி 2 இடங்களில் உள்ளன.
ஏ பிரிவு புள்ளி பட்டியல்:-
1. நியூசிலாந்து - 2 புள்ளிகள் - +1.200 (ரன்ரேட்)
2. இந்தியா - 2 புள்ளிகள் - +0.408 (ரன்ரேட்)
3. வங்காளதேசம் - 0 புள்ளி - -0.408 (ரன்ரேட்)
4. பாகிஸ்தான் - 0 புள்ளி - -1.200 (ரன்ரேட்)
அதேபோல் 'பி'பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் தலா ஒரு வெற்றிகளை பெற்றிருந்த போதிலும் ரன்ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2வது இடத்திலும் உள்ளன. தங்களது முதல் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் முறையே கடைசி 2 இடங்களில் உள்ளன.
பி பிரிவு புள்ளி பட்டியல்:-
1. தென் ஆப்பிரிக்கா - 2 புள்ளிகள் - +2.140 (ரன்ரேட்)
2. ஆஸ்திரேலியா - 2 புள்ளிகள் - +0.475 (ரன்ரேட்)
3.இங்கிலாந்து - 0 புள்ளி - -0.475 (ரன்ரேட்)
4. ஆப்கானிஸ்தான் - 0 புள்ளி - -2.140 (ரன்ரேட்)