ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த அஸ்வின்

3 weeks ago 4

புனே,

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியை சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் திணறடித்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இவர்களின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 16-1 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஜெயஸ்வால் 6 ரன்களுடனும், கில் 10 ரன்களுடம் களத்தில் உள்ளனர்.

முன்னதாக அஸ்வின் இந்த போட்டியில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 189 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. அஸ்வின் - 189 விக்கெட்டுகள்

2. நாதன் லயன் - 187 விக்கெட்டுகள்

3. கம்மின்ஸ் - 175 விக்கெட்டுகள்

4. ஸ்டார்க் - 147 விக்கெட்டுகள்

5. ஸ்டூவர்ட் பிராட் - 134 விக்கெட்டுகள்

Ashwin has scaled a new peak in the ICC World Test Championship and is on the verge of becoming the first to a major milestone in the competition #WCT25 | #INDvNZhttps://t.co/Bw9KRm52lC

— ICC (@ICC) October 24, 2024
Read Entire Article