ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி.வெற்றி

1 week ago 5

சென்னை,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.

இதில் முதல் பாதியில் சென்னை ஒரு கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் பஞ்சாப் பதில் கோல் திருப்பி சமநிலைக்கு கொண்டு வந்தது. இறுதி கட்டத்தில் சென்னை மேலும் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது. முடிவில் சென்னையின் எப்.சி. 2-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. சென்னை தரப்பில் வில்மர் ஜோர்டன் மற்றும் டேனியல் சிமா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். பஞ்சாப் தரப்பில் லூகா மாஜ்சென் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

Read Entire Article