மும்பை,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் மாலை 5 மணிக்கு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி, நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்.சி அணியுடன் மோதியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி பெற்றது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. - ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள்
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் எப்.சி அசத்தல் வெற்றி பெற்றது.