மும்பை,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் மும்பையில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி, நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்.சி அணியுடன் மோத உள்ளது.
நடப்பு தொடரில் சென்னை அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி என 15 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. மும்பை அணி 4 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி என 17 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டம் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் கொல்கத்தாவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. - ஜாம்ஷெட்பூர்எப்.சி. அணிகள் மோதுகின்றன.