
சென்னை,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு தொடரில் சென்னை அணி 23 ஆட்டங்களில் 6 வெற்றி, 6 டிரா, 11 தோல்வி கண்டுள்ளது. ஜாம்ஷெட்பூர் அணி 12 வெற்றி, 2 டிரா, 9 தோல்வியை சந்தித்துள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை அணி போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ய முனைப்பு காட்டும்.
ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்ட ஜாம்ஷெட்பூர் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். ஐ.எஸ்.எல். போட்டி தொடரில் இவ்விரு அணிகள் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை 7 ஆட்டத்திலும், ஜாம்ஷெட்பூர் 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.