
பனாஜி,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கோவா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா 2-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. கோவா தரப்பில் குவாரோட்ஸீனா மற்றும் முகமது யாசிர் தலா ஆகியோர் ஒரு கோல் அடித்தனர்.
இதில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறுகின்ற ஆட்டத்தில் மோகன் பகான் - ஒடிசா அணிகள் மோதுகின்றன.