
ஜாம்ஷெட்பூர்,
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா, பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன.
இதில் ஜாம்ஷெட்பூரில் நேற்றிரவு நடந்த 2-வது அரையிறுதியின் முதலாவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. - மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சிகள் செய்தன.
இதற்கு பலனாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் (90+1வது நிமிடம்) ஜாம்ஷெட்பூர் அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான அரையிறுதியின் 2-வது ஆட்டம் கொல்கத்தாவில் வருகிற 7-ந் தேதி நடக்கிறது. இதில் ஜாம்ஷெட்பூர் அணி 'டிரா' செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.