சென்னை: ‘மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு விரோதமானது. எனவே, அதை நிராகரிக்க வேண்டும்’ என, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.
ஏழை, எளிய, நடுத்தர மக்களை சுரண்டும் மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை, பாரிமுனையில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் போராட்டத்துக்கு தலைமை வகித்தார். பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தை தொடங்கி வைத்து, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா பேசியதாவது: