ஏழுமலையானை தரிசனம் செய்ய சென்ற போது சோகம்.. திருப்பதி அருகே சாலையில் கவிழ்ந்த கார்: 2 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!!

3 weeks ago 4

திருப்பதி: திருப்பதி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மஞ்சுநாத் என்பவர் தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார் புத்தலப்பட்டு – நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது சந்திரகிரி மண்டலத்தில் உள்ள காசிபண்டலா என்ற இடத்தில் குறுக்கே மற்றொரு வாகனம் வந்ததால் அதன்மீது மோதாமல் இருக்க முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்தது.

கார் கவிழ்ந்த விபத்தில் மஞ்சுநாத் தந்தை கரிகவுடா (60), அவருடைய அக்கா மகன் நூதன் (வயது 6) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த மஞ்சுநாத், அவரது அக்கா மற்றும் அவரது தாய் ஆகியோரை மீட்டு அம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து அதிவேகமாக காரை ஒட்டி சென்றதே காரணம் என சந்திரகிரி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏழுமலையானை தரிசனம் செய்ய சென்ற போது சோகம்.. திருப்பதி அருகே சாலையில் கவிழ்ந்த கார்: 2 பேர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.

Read Entire Article