ஏலகிரி மலைப்பாதையில் கார் மீது மோதி நின்ற தனியார் பஸ்

1 month ago 8

*வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிப்பு

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பேருந்துகள், கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் விடுமுறையான நேற்று முன் தினம் சென்னையில் இருந்து மூன்று சுற்றுலா பேருந்துகள் ஏலகிரி மலைக்கு வந்தது. மூன்று பேருந்துகள் வரிசையாக ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவுகளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு பேருந்து மலை ஏற முடியாமல் 7வது வளைவில் நின்றது. அப்போது ஏலகிரி மலையில் இருந்து கீழே இறங்கிய காரின் பின்புறம் மலை ஏற முடியாமல் நின்ற தனியார் பேருந்து பின்புறம் நகர்ந்து கார் மீது மோதி நின்றது.

இதனால் காரின் லைட்டுகள் உடைந்து பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதனால் கார் ஓட்டி வந்த நபருக்கும் தனியார் பேருந்து டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சாலையில் சுற்றுலாவிற்கு வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தனியார் சுற்றுலா பேருந்து டிரைவர் வளைவுகளில் வாகனத்தை இயக்க முடியாமல் பின்புறமும், முன் முன்புறமும் இயக்கி ஓட்டி சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் பேருந்து மலை மீது ஏற முடியாமல் நடுவழியில் நின்றதால் பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகளை உடன் வந்த இரண்டு பேருந்துகளில் ஏற்றிவிட்டு பின்னர் பேருந்து காலியாக
மேல்நோக்கி இயக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு ஆளானதோடு ஏலகிரி மலை சாலையில் வாகனங்கள் அணிவகுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மலையேறும் வாகனங்கள் மெதுவாக இயக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

The post ஏலகிரி மலைப்பாதையில் கார் மீது மோதி நின்ற தனியார் பஸ் appeared first on Dinakaran.

Read Entire Article