ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை

1 month ago 7

மும்பை,

உலக அளவில் கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வந்தன. இது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாகவும் கச்சா எண்ணெய் வள நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாகவும் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் காணப்பட்டன.

இந்நிலையில், கடந்த 6 நாட்களாக சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

அதன்படி, வர்த்தக இறுதியில் நிப்டி 217 புள்ளிகள் ஏற்றம் கண்டு 25 ஆயிரத்து 13 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், 542 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 21 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மேலும், 584 புள்ளிகள்வரை ஏற்றம் கண்ட சென்செக்ஸ் 81 ஆயிரத்து 634 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. 231 புள்ளிகள்வரை உயர்ந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 452 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 219 புள்ளிகள்வரை உயர்ந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 874 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

மேலும், 637 புள்ளிகள்வரை ஏற்றம் கண்ட பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 805 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த 6 நாட்களாக சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read Entire Article