சென்னை: சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் ஜாதி, வளர்ச்சிக்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழ் இறக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திட்டம் வகுக்க அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிடக் கோரி ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளத்துப்புதூரில் ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜப் பெருமாள், அர்ச்சாவதாரத் திருமேனியுடன் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பக்தர்களுக்கு வரம் தந்து வருகிறார். மலைநாட்டுத் திவ்ய தேசம் போல இக்கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நம்மாழ்வார் அவதரித்த வேளாளர் குலத்தில் பிறந்த ஆறுமுகக் கவுண்டர் வீரவைஷ்ணவராகி திருநாராயண ராமானுஜதாசர் எனும் திருப்பெயர் பெற்றார்.
வசதிகள் மிகக் குறைவான, குக்கிராமமான குளத்துப்புதூரில் ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜப் பெருமாளுக்குத் திருக்கோயில் கட்டி பெருமாளைப் பிரதிஷ்டை செய்து மகா சம்ப்ரோட்சணம் செய்தார். அப்போதிருந்து ஸ்ரீரங்கம் கோயில் சம்பிரதாய முறைகளைப் பின்பற்றி இக்கோயிலில் பூஜைகள் நடக்கின்றன. இந்நிலையில் கோவை ஆவல்பட்டியில் வரதராஜ பெருமாள், சென்ராய பெருமாள் கோயில்களுக்குக் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை அடைந்துள்ளது.
ஜாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது. ஜாதியை நிரந்தரமாக்கச் செய்யும் வகையிலான கோரிக்கை, அரசியல் சாசனம், பொது கொள்கைக்கு விரோதமானது. பிறப்பால் வரும் ஜாதி, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது என நீதிபதி வேதனை அடைந்துள்ளார். கோவை ஆவல்பட்டியில் வரதராஜ பெருமாள், சென்ராய பெருமாள் கோயில்களுக்குக் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
The post ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் ஜாதி, வளர்ச்சிக்கு எதிரானது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.