இன்று சொந்த வீட்டுக்கே மேப் போட்டுச் செல்லும் அளவிற்கு நாம் மாறிவிட்டோம். அந்த அளவிற்கு எப்போதுமான வழியை விட்டு புதிதாக எங்கு சென்றாலும் நமக்கு இருக்கும் ஒரே பலம் ‘கூகுள் மேப்’ செயலிதான். கூகுள் மேப் செயலியைஅடிப்படையாகக் கொண்டே இன்று டாக்ஸி, ஆட்டோ புக்கிங் செயலிகள், உணவு டெலிவரி, ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் என அனைத்தும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் ஏர் வியூ+ (Air View+) என்னும் புதிய வசதியை மேப்புடன் இணைத்திருக்கிறது கூகுள். இதன் மூலம் காலநிலை மாற்றங்கள், போகும் இடத்தில் வானிலை அப்டேட்,காற்றின் தூய்மை உள்ளிட்ட அனைத்தையும் கணக்கிட்டுக் கொடுக்க முடியுமாம். இந்த வசதி கூகுளின் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.