ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் விமான சேவை: குஜராத் – தாய்லாந்து விமானத்தில் அதிக மது விற்பனை

3 hours ago 2

குஜராத்: குஜராத்தில் இருந்து தாய்லாந்துக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முதல் விமானத்தில் இது வரை இல்லாத அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது. 175 பயணிகளுடன் குஜராத்தின் சூரத்தில் இருந்து விமானம் தாய்லாந்துக்கு புறப்பட்டது. குஜராத்தில் மது அருந்த தடை உள்ளதால் விமானம் புறப்பட்ட பிறகு விமான பயணிகளுக்கு மதுபான விற்பனை செய்யப்பட்டது.

இதனால் விமானத்தில் பயணித்தவர்கள் பலரும் மது பானத்தை அதிகளவில் வாங்கி அருந்தியுள்ளனர். விமானத்தில் மதுபானங்கள் முழுவதும் விற்று தீர்ந்த்தால் அதனை சமூக ஊடகம் வாயிலாக சிலர் பதிவிட்டு தங்கள் கவலையையும் வெளிப்படுத்தி இருந்தனர். விமானத்தில் பயணிக்கும் போது இவ்வளவு அதிகமான அளவுக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது இதுவே முதன்முறையாகும்.

The post ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் விமான சேவை: குஜராத் – தாய்லாந்து விமானத்தில் அதிக மது விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article