பாணாவரம்: ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கீழ்வீராணம் கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த நித்தியானந்தம் என்பவரது மகன் நிஷாந்த் (6). 1ம் வகுப்பு படித்து வந்தார். இவரது உறவினர் ஆற்காடு வட்டம், சாத்தூரை சேர்ந்த தமிழ்வாணன் மகன் வீரவேல் (8). விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்.
நேற்று பிற்பகல் சூரைக்குளம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க நிஷாந்த், வீரவேல் மற்றும் 2 சிறுவர்கள் சென்றனர். அப்போது நிஷாந்த்தும், வீரவேலும் ஏரிக்கரையோரம் வந்த மீன்களைப் பார்க்க தண்ணீரில் இறங்கி உள்ளனர். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு தண்ணீர் இழுத்து சென்றதால் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.
The post ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.