
தனுசு
தனுசு ராசி அன்பர்களே!
நீங்கள் மிகவும் வெளிப்படையான சுபாவம் கொண்டவர். ஆதலால் எளிதில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களைப் பொருத்தவரை, தங்களின் சுறுசுறுப்பினை பார்த்து மேலதிகாரிகள் தங்களுக்கு பரிசளிப்பார்கள். சக ஊழியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வீர்கள்.
சொந்த தொழில் செய்பவர்கள், பல கிளைகளை துவங்குவீர்கள். வியாபாரம் விரிவடையும்.
குடும்பத் தலைவிகள், தங்கள் பிள்ளைக்கு நல்ல வரன் பார்ப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் கூடும். வீட்டு தேவை பூர்த்தி ஆகும்.
மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரித்து படிப்பில் நல் மதிப்பெண்களை பெறக்கூடிய யோகம் உள்ளது. தேகம் பளிச்சிடும்.
பரிகாரம்
வியாழக்கிழமை அன்று தக்ஷிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்துவது நல்லது.
மகரம்
மகர ராசி அன்பர்களே!
நீங்கள் பார்ப்பதற்கு வேலை செய்யாதவர் போன்று இருந்தாலும் சரியான நேரத்தில் வேலையை முடித்து விடுபவர்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் மிகுந்த ஆர்வம் ஏற்படும். கடமையை சரிவர முடிப்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்கள் புதிய தொழில்நுட்பத்தை புகுத்துவீர்கள். இதன் காரணமாக லாபமும் அதிகரிக்கும்.
குடும்பத் தலைவிகள், தங்கள் குடும்பத்துடன் நாத்தனார் வீட்டிற்கு சென்று வருவீர்கள். கணவரது சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும்.
மாணவர்களுக்கு தேர்வு அச்சம் விலகும். நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. உடல் நலம் சிறப்படையும்.
பரிகாரம்
கணபதிக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று அருகம்புல் சாத்தவும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே!
சிறு வயது முதலே பல அனுபவங்களைப் பெற்றிருப்பீர்கள். அதனால் பெரிய சிக்கலான விசயத்தினையும் சாதாரணமாக கையாள்வீர்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு இருக்கின்ற பதவியில் இருந்து மேல் பதவிக்கான முன்னேற்றம் கிடைக்கும். சம்பளமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபத்திற்கு பஞ்சமில்லை. தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
குடும்பத் தலைவிகள் அக்கம் பக்கத்து வீட்டாரிடம் அனுசரணையாக இருப்பது நல்லது. கூடுமானவரை பொறுமையை கையாளவும். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். தங்கள் பிள்ளைகளால் பண வரவு உண்டாகும்.
மாணவர்கள் ஒரு இலக்கினை வைத்து படித்து வெற்றி காண்பீர்கள். உடல் நலம் சிறப்படையும்.
பரிகாரம்
ஞாயிறு அன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவது நல்லது.
மீனம்
மீன ராசி அன்பர்களே!
பிள்ளைகளுக்காக தன் இன்பத்தையே தியாகம் செய்யும் குணம் படைத்தவர் நீங்கள். அவர்களின் நன்மைக்காக எந்த துன்பத்தையும் பொறுத்துக் கொள்பவர்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவார்கள். அதன் மூலம் உற்பத்தி பெருகி லாபமும் கிடைக்கும்.
குடும்ப தலைவிகள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டிய மாதம் இது. அனைவரிடமும் நட்புறவு கொள்வது நல்லது. குறிப்பாக கணவர் வீட்டாரிடம் அனுசரித்து செல்வது நல்லது.
மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றி பெற அதிக முறை எழுதி பார்ப்பது நல்லது. உடல் நலத்தில் அக்கறை கொள்வீர்கள்.
பரிகாரம்
வியாழக்கிழமை அன்று சித்தர்களின் ஜீவசமாதிக்குச் சென்று தியானம் மேற்கொள்ளலாம்.
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389