ஏப்ரல் 17ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

7 hours ago 3

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை தமிழக அமைச்ச ரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பே ரவை கூட்டம் கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 29ம் தேதி வரை பேரவை கூட்டம் நடைபெறும். இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல் வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட் டம் நாளை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். சென்னை, தலைமை செயலகத்தில் நாளை (17ம் தேதி) மாலை 6.30 மணிக்கு நடக்கும்.

அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் புதி தாகதுவங்கப்பட உள்ள தொழில் முதலீடுகள் மற்றும் விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்ட புதிய திட் டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத் தில் விவாதிக்கப்பட உள்ளது.

The post ஏப்ரல் 17ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article