ஆர்.கே.பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த சந்திர விலாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏபி கண்டிகை கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் விநாயகர் கோவில் தெருவில் மின் கம்பம் அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால், மின்கம்பம் முழுவதும் சிதலமடைந்து காணப்படுகிறது. இதனை மாற்றியமைக்கக் கோரி கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கும், மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஏபி கண்டிகையில் மின் கம்பத்தை மாற்றியமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.