‘ஏனோ வானிலை மாறுதே…’ நடுங்க வைக்கும் குளிர் சீசன் கொடைக்கானலில் துவக்கம்

6 months ago 18

கொடைக்கானல் : கொடைக்கானலில் இரண்டாம் சீசன் முடிந்த நிலையில், தற்போது குளிர் சீசன் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் மாதம் முழுவதும் கடும் குளிர் நிலவும். கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது சாரல் மழை, மிதமான மழை, கனமழை பெய்து வந்தது.

தற்போது குளிர் சீசன் தொடங்கி, கடுங்குளிர் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது. வழக்கமாக 22 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் நிலவும். தற்போது இந்த அளவு குறைந்து 15 டிகிரிக்கு கீழாக உள்ளது. இந்த வெப்ப அளவு வரும் வாரத்தில் மேலும் குறைய தொடங்கும். டிசம்பர் மாதம் இந்த வெப்பத்தின் அளவு 10 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்.

மேலும் படிப்படியாக குறைந்து 5 முதல் 7 டிகிரி வரை வெப்பம் நிலவும். ஒரு சில இடங்களில் குறிப்பாக ஏரி உள்ளிட்ட ஈரப்பதமான காற்று வீசக்கூடிய பகுதிகளில் ஜீரோ டிகிரி அளவிற்கு வெப்பம் குறைந்து பனிக்கட்டிகள் தென்படும். தற்போது குளிர் சீசன் தொடங்கியுள்ள நிலையில், கொடைக்கானலில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் நடை பயிற்சி செய்பவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் சற்று தாமதமாக செல்ல தொடங்கி உள்ளனர். அதேபோல மாலை நேரங்களில் சற்று முன்னதாகவே வீடு திரும்பி வருகின்றனர்.

The post ‘ஏனோ வானிலை மாறுதே…’ நடுங்க வைக்கும் குளிர் சீசன் கொடைக்கானலில் துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article