பட்டுக்கோட்டை, ஜன.11: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் புதுப்பானைகளில் பொங்கல் வைத்து மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கலை சிறப்பாக கொண்டாடினர். விழாவிற்கு கல்லூரி செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் விஜயலெட்சுமி முன்னிலை வகித்தார். சமத்துவ பொங்கல் விழாவில் நல்வழிக்கொல்லை சித்தர்சுவாமிகள் கலந்து கொண்டு பொங்கல் படையலிட்டு தீபாராதனை காட்டினார். பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மற்றும் நாடகங்கள் நடந்தது. விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள், பேராசிரியைகள், அலுவலக பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
The post ஏனாதி ராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.