ஏஞ்சல் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்

3 weeks ago 7

 

திருவள்ளூர், ஜன. 12: திருநின்றவூர், ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தமிழரின் அடையாளம் என்றதும் நினைவுக்கு வருவது விழாக்களா? வாழ்க்கை முறைகளா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் சிந்தை ஜெயராமன் தலைமை தாங்கினார். தாளாளர் வினோத் ஜெயராமன், தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தனர்.

தமிழ் ஆசிரியர் பாண்டியன் வரவேற்றார். இதில், வாழ்க்கை என்ற அணியில் ஆசிரியை ஸ்ரீமதி, மோகன பிரியா, மாணவர்கள் ரக்சிதா, ஜெய்ஸ்ரீ, மகிஷா, ரித்தீஷ், ரோஹித் ஆகியோரும் விழாக்கள் அணியில் ஆசிரியை சுமதி, கிருபா ஸ்ரீ, மாணவர்கள் அனிஷ், ஜெமிமா, முகில் ஓவியா, மோனிஷா ஆகியோரும் வாதாடினர்.

இறுதியாக புலவர் செம்பை சேவியர் நடுவராக பங்குபெற்று தமிழரின் அடையாளத்தில் வாழ்க்கை முறையோடு விழாக்களும் இணைந்தே இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கினார். பிறகு கோலப் போட்டி, மெஹந்தி போட்டி நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமியர் தமிழர் பாரம்பரிய முறைப்படி வண்ணவண்ண உடையில் வந்தனர். ஆசிரியர்கள் பொங்கல் பொங்கி, பொங்கலோ…பொங்கல்… என முழங்கி விழாவை மகிழ்ந்து கொண்டாடினர். முடிவில் கணித ஆசிரியர் வீரவேல் நன்றி கூறினார்.

The post ஏஞ்சல் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article