திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், லட்சுமிபுரத்தில் உள்ள ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 44வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளியின் நிர்வாகத் தலைவர் சிந்தை ஜெயராமன் தலைமை தாங்கினார். தாளாளர் வினோத் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி வரவேற்றார்.
இந்த விழாவில் திரைப்பட நடிகர் ஜி.எம்.சுந்தர் சிறப்பு விருத்தினராகக் கலந்துகொண்டு தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஏ.ஷர்மிளா (கராத்தே), ஜெ.நித்திஷ் (சிலம்பம்), கே.தனிஷ் (சிலம்பம்), கே.ஜனனி (அட்டியா பட்டையா), பி.ஷாம் (நீச்சல் போட்டி) ஆகியோருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
The post ஏஞ்சல் மெட்ரிக் பள்ளியில் 44வது ஆண்டு விழா appeared first on Dinakaran.