ஏகேடி தர்மராஜா ஆரம்ப பள்ளியில் குழந்தைகள் நல மருத்துவ முகாம்

3 months ago 16

ராஜபாளையம், அக்.19: ராஜபாளையம் ஸ்ரீ ராவ்பகதூர் ஏகேடி தர்மராஜா ஆரம்பப் பள்ளியில் ஏகேடி. தர்மராஜா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பள்ளி அறக்கட்டளை சார்பில் ஏ.கே.டி.ரமணிதேவி முகாமை துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களை பள்ளிக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்து பேசினார். சிறப்பு விருந்தினரை பள்ளிக் குழு உறுப்பினர் ராம்குமார் கவுரவப்படுத்தினார்.

மருத்துவ முகாமில் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் குமரேசன் 136 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து பரிந்துரைகள் வழங்கினார். பள்ளிக் குழு உறுப்பினர் பேராசிரியர் முத்துகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் பள்ளிக் குழு உறுப்பினர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார். இம்முகாமில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, மழைக்காலங்களில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகள், சளி, இருமல் உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

The post ஏகேடி தர்மராஜா ஆரம்ப பள்ளியில் குழந்தைகள் நல மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article