கோவை, மே. 6: மே 5ம் தேதி கார்ஸ் மார்கிஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏஐடியுசி சார்பில் நாடு முழுவதும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் கோவை கோபாலபுரத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில், தமிழ்நாட்டில் 70க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட தொழில் இனங்களுக்கு தமிழ்நாடு அரசால் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஏஐடியுசி நிர்வாகிகள் ஆர்.குணசேகரன், ஜே.தீபக்குமார், ராக்கேஷ்சிங், ஷானவாஷ், பஞ்சலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post ஏஐடியுசி சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.