ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக உதவி கேட்ட நபர்.. ஏ.டி.எம் அட்டையைத் திருடி பணத்தை எடுத்த கேடி..!

2 months ago 12
செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் இந்தியன் வங்கிக் கிளை ஏ.டி.எம் மையத்தில், அமுல்ராஜ் என்பவர், பணம் எடுக்கத் தெரியாததால், அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். அந்த நபரும் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, வேறொரு ஏ.டி.எம் அட்டையைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அமுல்ராஜின் வங்கிக் கணக்கிலிருந்து அடுத்தடுத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து வரும் போலீசார், ஏ.டி.எம் மையங்களில் பழக்கமில்லாத நபர்களிடம் உதவி கேட்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.
Read Entire Article