ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது

2 weeks ago 8

புதுடெல்லி,

வங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பது, ஸ்டேட்மென்ட் எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு ஏ.டி.எம். எந்திரத்தை ஒரு மாதத்துக்கு 5 முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் ஏ.டி.எம்-ஐ பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும்.

அதன்படி இதுவரை இலவச பரிவர்த்தனை வரம்பை முடித்த பிறகு, மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.21-ஐ கட்டணமாக வங்கிகள் வசூலித்து வந்தன. தற்போது இந்த கட்டணம் ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மே 1-ந் தேதி (இன்று) முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெருநகரங்களில் 1 மாதத்தில் 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளும்,மற்ற நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகளும் செய்யலாம் என்றும் பரிந்துரையை விட அதிகமாக பரிவர்த்தனை செய்தால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கிறது என்பதை சரிபார்த்தால், ரூ.7 கட்டணம் செலுத்த வேண்டும், முன்பு இதற்கு கட்டணம் ரூ.6 ஆக இருந்தது.

Read Entire Article