ஏ.சி. உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் ரூ.2,000 கட்டணத்தில் பயணிக்கும் வகையில் புதிய திட்டம் விரைவில் அறிமுகம்

3 hours ago 1

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.2,000 கட்டணத்தில் மாதம் முழுவதும் பயணிக்கும் வகையில் புதிய திட்டத்தை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஏ.சி. உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்துகளிலும் பயணம் செய்ய முடியும்.

மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

தற்போது ரூ.1,000 கட்டணத்தில் ஏ.சி. பேருந்துகள் தவிர்த்து மற்ற பேருந்துகளில் பயணம் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ரூ.2,000 கட்டணத்தில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தாலும், ரூ.1,000 மாதாந்திர பயண திட்டமும் தொடர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Entire Article