ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி

2 months ago 14

சென்னை,

நடிகர் கார்த்தி, பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கைதி 2, கார்த்தி 29 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் கார்த்தி. மேலும் கார்த்தி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கும் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கப் போவதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஏ.ஆர் முருகதாஸ் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அதேசமயம் பாலிவுட்டில் சல்மான்கான் நடிப்பில் சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் சிக்கந்தர் படத்தை முடித்த பின்னர் ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனின் எஸ்கே23 படத்தை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஏ ஆர் முருகதாஸ், சூர்யா நடிப்பில் கஜினி 2 திரைப்படத்தை இயக்கப் போவதாக சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன. இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கப் போவதாகவும் அந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த படமானது கஜினி 2 திரைப்படத்திற்கு முன்பாக உருவாகும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Read Entire Article