ஜோஹன்னஸ்பர்க்: தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்.ஏ. டி20 தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. ஜோஹன்னஸ்பர்க்கில் நேற்றிரவு நடந்த இறுதி போட்டியில் எம்ஐ கேப் டவுன்-சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த எம்ஐ கேப் டவுன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ரியான் ரிக்கெல்டன் 15 பந்துகளில் 33 ரன்களும், கானர் 26 பந்துகளில் 39 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 14 பந்துகளில் 20 ரன்களும், டெவால்ட் ப்ரீவிஸ் 18 பந்துகளில் 38 ரன்களும் சேர்த்தனர்.
182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் டோனி டி சார்ஸி 26 ரன்களும், டாம் ஆபேல் 25 பந்துகளில் 30 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 15 ரன்களும் எடுத்திருந்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 18.4 ஓவர்களில் 105 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எம்ஐ கேப் டவுன் அணியின் ரபாடா 4, டிரெண்ட் போல்ட் 2, ஜார்ஜ் லிண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து எம்ஐ கேப் டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று எஸ்.ஏ.டி. 20 கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் குழுமம் தனது 5 அணிகள் மூலம் கோப்பையை வென்று சாதனை புரிந்துள்ளது. ஐபிஎல், மகளிர் ஐபிஎல், இன்டர்நேஷனல் லீக் டி20, மாஸ்டர்ஸ் லீக் டி20 ஆகிய 5 தொடர்களிலும் கோப்பை வென்ற ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் குழுமம் உள்ளது.
The post எஸ்ஏ 20 தொடர்: எம்ஐ கேப் டவுன் அணி சாம்பியன் appeared first on Dinakaran.