
கோராபுட் ,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் "எஸ்எஸ்எம்பி 29" படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு ஒடிசாவில் உள்ள கோராபுட் பகுதியில் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், ஒடிசாவில் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.