எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்

2 months ago 12
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே பாதுகாவலர் இல்லாத SBI வங்கிக் கிளைக்குள் நுழைந்து லாக்கரில் இருந்த சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை இரவு வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து அதன் வழியாக உள்ளேச் சென்ற கொள்ளையர்கள் லாக்கரை கேஸ்கட்டர் மூலம் வெட்டி, 497 பாக்கெட்டுகளில் இருந்த சுமார் 19 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையடிப்பதற்கு முன்பு வங்கியில் இருந்த சிசிடிவி கேமரா ஒயர்கள் மற்றும் அபாய மணியை துண்டித்த கொள்ளையர்கள், ஹார்ட் டிஸ்குகளையும் எடுத்துச் சென்றுள்ளனர். 
Read Entire Article